முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதியாத காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதியாத காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையருக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

கட்டாய ஹெல்மெட் ,சீட் பெல்ட் அணிவது உள்ளிட்ட விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்தக் கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஹெல்மெட் விதிமீறலை தடுக்காத காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பைக்கின் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என காவல் துறை ஆணையருக்கு உத்தரவிட்டு உள்ளனர். 

எடப்பாடியில் ஹெல்மெட் போடாமல் பயணித்த 2 காவலர்கள் உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பைக் பின்னால் அமர்ந்து செல்வோர் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். மேலும், ஹெல்மெட் உத்தரவு அமல் குறித்து, நடவடிக்கை எடுக்காத காவலர்கள் பற்றி ஜூலை 5-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை திருப்தி அளிக்காவிட்டால் நடவடிக்கைகள் கடுமையானதாக இருக்கும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து