எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய பாராளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி காலை 11 மணிக்கு தாக்கல் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை களில் அரசு அலுவலங்களும், பங்கு சந்தைகளும் மூடப்பட்டிருக்கும். அது மட்டுமின்றி அன்று குரு ரவிதாஸ் ஜெயந்தி தினமாகும். இதனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் ஆகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் நேற்று ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய பாராளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், நிதி அமைச்சராக இருந்த காலத்தில் தொடர்ச்சியாக 9 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


