எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம், பா.ம.க. சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை என்று தெரிவித்துள்ள ராமதாஸ், அன்புமணிக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பா.ம.க.வை சொந்தம் கொண்டாடுவதில் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி தரப்பினர் சந்தித்தனர். அப்போது, அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி அமைத்துள்ளதாக கூட்டாக அறிவித்தனர். ஏற்கெனவே கட்சி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அன்புமணி தரப்பினர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.இந்த கூட்டணி குறித்து ராமதாசின் கருத்து என்ன என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; பா.ம.க. சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை. அன்புமணி யாருடன் சேர்ந்தாலும் அவர்களுக்கு பா.ம.க.வினர் உட்பட யாரும் ஓட்டு போட மாட்டார்கள். ஏனெனில், தந்தைக்கே துரோகம் செய்த, தந்தையிடம் இருந்து கட்சியை அபகரிக்க நினைத்தவருக்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.
நேற்று முன்தினம் நடந்தது ஒரு நாடகம். ஏன் தந்தைக்கு எதிராக அன்புமணி செயல்படுகிறார் என மக்கள் பேசுவதை கேட்க முடிகிறது. பா.ம.க. சார்பில் கூட்டணி பேசியது என்பது கூத்து. கூட்டணி பேச்சுவார்த்தை என்பது நீதிமன்ற அவமதிப்பு. என் தலைமையில்தான் கூட்டணி பேச முடியும். நான் அமைக்கின்ற கூட்டணிதான் வெற்றிபெறும். நான் சேரும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


