முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும்: அதிபர் ட்ரம்ப் தகவல்

வியாழக்கிழமை, 8 ஜனவரி 2026      உலகம்
Trump 2023-04-13

வாஷிங்டன், நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் உள்ளிட்ட 8 போர்களை நிறுத்தியிருப்பதாகவும், தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அவ்வப்போது பேட்டிகளில் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தார். 

ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த ட்ரம்ப், தற்போது நோபல் பரிசு எல்லாம் தனக்கு ஒரு பொருட்டல்ல என்று பேசியுள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இதுதொடர்பாக கூறியதாவது:

“நேட்டோ நாடுகளைக் காப்பாற்றியது நான்தான். என்னுடைய தனிப்பட்ட முயற்சியால் நேட்டோ நாடுகளுக்கான நிதிப் பங்களிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும். நான் தனியாகவே 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். நோபல் பரிசு எனக்கு ஒரு பொருட்டல்ல. நியாயமற்ற முறையில் தனக்கு நோபல் பரிசை நார்வே மறுத்துள்ளது. நார்வே முட்டாள்தனமான முடிவை எடுத்துள்ளது. சீனாவும் ரஷ்யாவும் பயப்படும் ஒரே நாடு அமெரிக்காதான். மோதல்களைத் தடுத்து அமைதியும் முன்னேற்றமும் ஏற்பட காரணமாக இருக்கும் நாடும் அமெரிக்காவே” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து