எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஜன நாயகன் படத்தை திரையிட தி.மு.க. அரசு கூட்டணி கட்சிகள் எதிர்க்கவில்லை என்று வைகே கூறினார்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் இருந்து நேற்று 7-வது நாள் சமத்துவ நடைபயணத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடங்கினார். வழிநெடுகிலும் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கருங்காலக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அது முறியடிக்கப்படும். மத்திய அமைச்சர் அமித்ஷா, ஆணவம், அகம்பாவமிக்க வார்த்தைகளை தமிழ்நாட்டு மண்ணிற்கு வந்து சொல்லிவிட்டு போகின்ற துணிச்சல் வந்துள்ளது. வியர்வை ரத்தம் சிந்தி எண்ணற்றவர் உயிர் பலி கொடுத்து பெரியார், அண்ணா, கருணாநிதி கட்டிக்காத்த திராவிட கோட்டை வெறும் எக்கு இரும்பால் கட்டப்பட்டது அல்ல. ரத்தமும் சதையால் பாதுகாக்கப்பட்டன. ஜன நாயகன்' திரைப்படத்திற்கும் தி.மு.க.விற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை.
வழக்கமாக எத்தனையோ படங்களுக்கு அது நடந்திருக்கிறது. அதுபோல விஜயின் படத்துக்கும் நடந்திருக்கக்கூடும். திரைப்படத்தை வெளியிடுவதை தி.மு.க.வோ, ம.தி.மு.க.வோ அல்லது கூட்டணி கட்சிகளோ எதிர்க்கவில்லை. நாங்கள் இதுவரை ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று ஒரு சொல் கூட, தப்பி தவறி பேசியது கூட கிடையாது. எங்களைப் பொறுத்தவரை நேற்று முன்தினம் வரை வைக்கவில்லை இனியும் வைக்க மாட்டோம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


