முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகே உடல்நலமின்றி தோட்டத்தில் தஞ்சமடைந்த மயில் மீட்பு

திங்கட்கிழமை, 1 ஜூலை 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் அருகே உடல் நலக்குறைவால் பறக்க முடியாமல் தோட்டத்தில் தஞ்சமடைந்த மயிலை வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அதனை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
திருமங்கலம் அருகேயுள்ள விடத்தகுளம் கிராமத்து கண்மாய் பகுதியில் ஏராளமான மயில்கள் வசித்து வருகின்றன.இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் கயிறு பின்னும் தொழிற்சாலை நடத்தி வரும் திலகர் என்பவருக்கு சொந்தமான  வாழைத்தோட்டத்தில் பறக்க முடியாத நிலையில் வந்த ஆண் மயிலொன்று இரண்டு நாட்களாக அங்கு சோர்வுடன் தங்கியுள்ளது.இதனை கண்ட திலகர் அதற்கு உணவாக தண்ணீரும்,தானியங்களும் கொடுத்துள்ளார். இருப்பினும் நீண்ட தோகையுடைய அந்த ஆண்மயில் அவற்றை உண்ணாமல் மயில் கண்களை மூடியபடி மயங்கிய நிலையில் காணப்பட்டது.இதையடுத்து தனது தோட்டத்தில் கண்பார்வை மங்கிய நிலையில் மயில் தஞ்சமடைந்திருப்பது குறித்து வனத்துறையினருக்கு திலகர் தகவல் கொடுத்துள்ளார்.இதனை தொடர்ந்து விடத்தகுளம் கிராமத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி வனகாவலர் ஆறுமுகம்  மயிலினை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக அதனை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.உடல் நலக்குறைவு காரணமாக விடத்தக்குளம் பகுதியிலுள்ள தோட்டங்களில் மயில்கள் அடிக்கடி தஞ்சமடைந்திடும் நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து