கட்சி மாறியவர்களால் நிரம்பி வழியும் பா.ஜ.க. கப்பல் மூழ்கும்: மராட்டிய காங். தலைவர் சொல்கிறார்

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019      இந்தியா
Ashok Chavan 2019 08 02

கட்சி மாறிய சந்தர்ப்பவாதிகளால் நிரம்பி வழியும் பா.ஜ.க. கப்பல் மூழ்கும் என மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அசோக் சவான் கூறியுள்ளார்.

மராட்டியத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. விரைவில் சட்டமன்ற தேர்தலும் நடக்க உள்ளதால் அந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆளும் பா.ஜ.க., சிவசேனா கட்சிகளுக்கு அணி மாறி வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவரான ராதாகிருஷ்ண விகே பாட்டீல் (காங்கிரஸ்) சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்து அமைச்சரானார்.

இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்து விட்டு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர். இந்த நிலையில், தொடர்ந்து தங்கள் கட்சியினரை இழுத்து வரும் பா.ஜ.க.வை மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அசோக் சவான் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிரம்பி வழியும் கப்பல் என்னவாகும் மூழ்கி விடும். அதுபோல தான் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களை இழுத்துக் கொள்ளும் பா.ஜ.க.வில் சந்தர்ப்பவாதிகள் நிரம்பி வழிகிறார்கள். அந்த பா.ஜ.க. கப்பல் மூழ்கி விடும். இது உறுதி. சந்தர்ப்பவாதிகள் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளதால் காங்கிரசில் காலியிடம் ஏற்பட்டு உள்ளது. இதில் புது மற்றும் திறமை வாய்ந்தவர்கள் நிரப்பப்படுவார்கள். காங்கிரசின் உண்மையான பலம் தொண்டர்கள் தான். அது கட்சியை விட்டு வெளியேறிய தலைவர்களால் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து