முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக யானைகள் தினம்: ராமேசுவரம் திருக்கோவில் யானைக்கு பழம்,கரும்பு கொடுத்து கொண்டாட்டம்.

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,-   ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு  திருக்கோவில் யானை ராமலெட்சுமிக்கு உணவாக ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கரும்பு,ஆப்பிள்,வாழைப்பழம் ஆகி்யவைகள்  கொடுத்து யானைகள் தினத்தை நேற்று கொண்டாடினார்கள்.

 திருக்கோவில் வடக்கு நந்தவனம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வாளர் தில்லைபாக்கியம் தலைமை வகித்தார்.ராமேசுவரம் நுகர்வோர் இயக்க செயலாளர் களஞ்சியம் மற்றும் கம்பன் கழகம் பொறுப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னதாக பள்ளியின் நல்லாசிரியர் ஜெயக்காந்தன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் பள்ளியில் என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி பிரிவை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட  மாணவர்கள் யானைக்கு வரிசையாக வாழைப்பழம்,கரும்பு,ஆப்பிள் போன்ற உணவுப்பொருள்களை கொடுத்தனர்.நிகழ்ச்சியில் உணவு கொடுத்த மாணவர்களுக்கு திருக்கோவில் யானை ராமலெட்சுமி தும்பி கையால் ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் பழனிச்சாமி,தினகரன்,யானை பாவான் ராமு ஆகியோர்கள் யானைக்கு பழங்கள் கொடுத்து கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து