உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெளியேற்றம்

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
SPORTS-2 2018 08 23

Source: provided

பாலில் : சுவிட்சர்லாந்து பாலில் நடைபெற்று வரும் உலக சாம்பின்ஷிப்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்தார்.

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் எட்டாம் நிலை வீராங்கனையான இந்தியாவைச் சேர்ந்த சாய்னா நேவால் டென்மார்க்கைச் சேர்ந்த மியா பிளிச்பெல்ட்-ஐ எதிர்கொண்டார்.

இதில் சாய்னா 21-15, 25-27, 12-21 என கடும் போராட்டத்திற்குப் பின் தோல்வியடைந்து வெளியேறினார். அதே வேளையில் பி.வி. சிந்து அமெரிக்காவைச் சேர்ந்த பெய்வான் ஷெங்-கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் சீன தைபே வீராங்கனை தை ஜூ யிங்கை எதிர்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து