ஆப்கன் விவகாரத்தில் ஒபாமா செய்த தவறை நீங்களும் செய்ய வேண்டாம்: டிரம்புக்கு முன்னாள் தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தல்

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2019      உலகம்
Trump-Obama 2019 09 04

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா செய்த அதே தவறை டிரம்பும் செய்ய வேண்டாம் என அமெரிக்க முன்னாள் தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவத்தினருக்கு ஆதரவாக அமெரிக்காவின் ராணுவ படைகள் முகாமிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் அமெரிக்க படைகள் அங்கு உள்ளன. அமெரிக்க படைகளை முற்றிலும் வெளியேற்றுமாறு தலிபான் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே திட்டமிட்டபடி, ஆப்கானிஸ்தானின் 5 ராணுவ தளங்களில் இருந்து அமெரிக்க ராணுவ படைகள் வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா செய்த அதே தவறை டிரம்பும் செய்ய வேண்டாம் என ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு விவகாரங்களில் பணியாற்றிய அமெரிக்க முன்னாள் தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக முன்னாள் தூதரக அதிகாரிகள் 9 பேர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறும் தேதியை முன்கூட்டியே தெரிவிக்கக் கூடாது. படைகள் வெளியேறும் தினத்தை திரும்ப திரும்ப முன்கூட்டியே அறிவித்ததே முன்னாள் அதிபர் ஒபாமா நிர்வாகம் செய்த தவறு ஆகும். அது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சாதகமாக அமைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படைகள் வெளியேறும் தினத்தை கூறுவதற்கு பதிலாக ஒப்பந்த விதிமுறைகளுக்கு தலிபான்கள் கட்டுப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து