141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019      தமிழகம்
EPS-OPS floral respect to periyar statue 2019 09 17

சென்னை : தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் செயல்படும் தமிழக அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அவர்களது பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தந்தை பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17-ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன்படி, தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வி.சரோஜா, எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, பா.பென்ஜமின், நிலோபர் கபீல், க.பாண்டியராஜன், அரசு தலைமைச் செயலாளர் க.சண்முகம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, வைகை செல்வன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, ஜே.சி.டி. பிரபாகர், அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம், மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் பி.சத்தியா எம்.எல்.ஏ., விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ., டி.ஜி.வெங்கடேஷ் பாபு, சிட்லபாக்கம் ராஜேந்திரன், வாலாஜா பாத் கணேசன், முன்னாள் எம்.பி.க்கள் எஸ்.ஆர். விஜயகுமார், டாக்டர் ஜெயவர்த்தன், மனோஜ் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.செம்மலை, சிறுணியம் பலராமன், எஸ்.டி.கே. ஜக்கையன், ராஜன் செல்லப்பா, மாநில இலக்கிய அணி இணை செயலாளர்கள் டி.சிவராஜ், நடிகர் ஜெயகோவிந்தன், மற்றும் சரஸ்வதி ரங்கசாமி, பகுதி செயலாளர் டி.தசரதன், பரிமேலழகன், வட்ட செயலாளர் கே.துளசி, வழக்கறிஞர் ஆர்.சதாசிவம், நமசை கே.பி.முத்து, மயிலை நரேஷ், வி.எம்.ஜி.முகுந்தன், ‘டியூசிஎஸ்’ பி.சீனிவாசன், லிபர்டி ராஜூ, மாவட்ட பேரவை இணை செயலாளர் பிராட்வே எம்.இஸ்மாயில் கனி, வட்ட செயலாளர் இளையமாறன், பி.சின்னையன், சின்னி உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் ஆ. கார்த்திக், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பொ. சங்கர், கூடுதல் இயக்குநர் .உல.இரவீந்திரன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து