வானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019      இந்தியா
astra missile test success 2019 09 17

புது டெல்லி : உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அஸ்தரா ஏவுகணையை ஏவி இந்திய விமானப்படை வெற்றிகரமாக பரிசோதித்தது.

ஒடிசா கடற்கரையில், வங்காள விரிகுடா கடலில் இந்த அஸ்த்ரா ஏவுகணை பரிசோதனை நேற்று செய்யப்பட்டது. சுகோப்-39 எம்.கே.ஐ. விமானத்தில் மூலம் ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை இந்த ஏவுகணைகள் வெற்றிகரமாக தாக்கி அழித்தன என்று பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து பாதுகாப்புதுறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,  வானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் இந்த அஸ்த்ரா ஏவுகணை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. விண்ணில் செலுத்தும் போது மிக்சிறப்பாக ஏவுகணை சென்று துல்லியமாக இலக்குகளை தாக்கி அழித்தது. பல்வேறு ராடார்கள், மின்னனு கண்காணிப்பு முறை, சென்சார் ஆகியவை மூலம் ஏவுகணைய பின்தொடர்ந்ததில் இலக்கை துல்லியமாக தாக்கியது தெரியவந்தது. இந்த ஏவுகணையை பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்தியா உள்நாட்டில் தயாரிக்கும் அஸ்த்ரா ஏவுகணை குறுகிய தொலைவு மற்றும் நீண்ட தொலைவு இலக்குகளை சென்று தாக்கும் இருபிரிவுகளில் இருக்கின்றன. நேற்று சோதனை செய்யப்பட்ட அஸ்த்ரா ஏவுகணையின் இலக்கு 70 கி.மீ தொலைவாகும். மணிக்கு 5,555 கி.மீ வேகத்தில் வானில் செல்லக் கூடியது. ஏறக்குறைய 15 கிலோ வெடிபொருட்களை இதில் சுமந்து செல்லும் தன்மை கொண்டது.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து