முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டியது அவசியம் - கதை கூறி விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழா, சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏ.சி.எஸ். கன்வென்ஷன் மையத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்வியின் அவசியம் குறித்து கதை கூறி மாணவ, மாணவிகளிடையே விளக்கம் அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

ஊசி ஒன்று தன்  ஒரு முனை கூர்மையாக இருப்பதில் பெருமையடைந்தது.  ஆனால் தன் மறு முனையில் துவாரம் இருப்பதை அவமானமாக நினைத்தது.  ஒரு நாள் அதன் காதுமுனை உடைந்து போனது.  காதறுந்த நிலையில் அந்த ஊசியை பயன்படுத்தியவர், அந்த ஊசியை தூக்கி எறிந்தார்.  அப்போதுதான் அந்த ஊசிக்கு தான் அவமானமாக நினைத்த மறுமுனையின் முக்கியத்துவம் புரிந்தது. மாணாக்கர்கள் ஆகிய நீங்கள் கற்ற கல்வி, ஊசியின் கூர்மையை போன்றது. வெளி உலகில் நல்ல குடிமகனாக விளங்குவதற்கு பொது அறிவு, வாழ்க்கை கல்வி, ஞானம் அளிக்கக்கூடிய புத்தகங்களை படிப்பது ஆகியவை ஊசியின் காது  போன்றது. தன்னுள் நூலை நுழைத்துக் கொள்ள காது இருப்பதால் தான் கூர்மையான ஊசி பயன்படுகின்றது.  அதே போன்று, மாணாக்கர்களாகிய நீங்கள்  எவ்வளவுதான் படித்திருந்தாலும், உங்கள் கல்வி முழுமை பெற, நீங்கள் ஏட்டுக் கல்வியுடன், வாழ்க்கை கல்வியையும் சேர்ந்து கற்க வேண்டியது அவசியமாகும்.  பெற்றோர்களும் வாழ்க்கை கல்வி பெறுவதன் அவசியத்தை  தங்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து