Idhayam Matrimony

1.36 லட்சம் போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்று முதல் போனஸ் - பண்டிகை முன்பணம் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

கரூர் : 1,36, லட்சம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இன்று முதல் தீபாவளி போனஸ் பண்டிகை முன்பணம் ஆகியவற்றை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர்  எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்துத்துறையைச் சேர்ந்த ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 619 தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்கென்று ரூ. 206.52கோடி நிதியினை முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதிகபட்சமாக ரூ.16,800 வரை போனஸ் தொகை வழங்கப்படவுள்ளது. இன்று முதல் 20 சதவீத போனஸ் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களிலும் போக்குவரத்துத்துறை தொழிலாளர்களுக்கு இன்று முதல் தீபாவளி முன்பணம் வழங்கப்படும். அதே போல தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. தீபாவளி பண்டிகைக்காக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளோடு சேர்த்து சுமார்  21,586 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

மேலும், குறைந்த தூரம் செல்லக்கூடிய மூன்று மற்றும் இரண்டு இருக்கைகள் கொண்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே துவக்கியுள்ளார். தற்போது கூடுதலாக பேருந்துகளுக்கான கூண்டு கட்டும் பணி முடிவடைந்தவுடன் அந்த போக்குவரத்து கழகத்தில் இயக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 150 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும். இதில் சென்னை மாநகரத்தில் 50 குளிர்சாதன பேருந்துகள் (ரெட் பஸ்கள்) இயக்கப்படும். ஏற்கனவே, குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகள் சோதனை ஓட்டமாக திருவண்ணாமலை முதல் சென்னை வரையும் திருநெல்வேலியிலும் இயக்கிப் பார்க்கப்பட்டது. இதில், பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகப்படியான பேருந்துகளை இயக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இன்னும் 2 ஆயிரம் பேருந்துகளை வாங்கி பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார். வெகு விரைவில் அந்த பேருந்துகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பேருந்து உரிமையாளர்களின் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து