எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்தார்பூருக்கு வர இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை, அடையாள அட்டை போதுமானது என கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்த நாட்டின் ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பிலும், இறையாண்மையிலும் சமரசம் இல்லை என ராணுவம் திட்டவட்டமாக கூறி உள்ளது.
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், தனது வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அங்கு அவரது நினைவாக கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சீக்கியர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வருவது கடமையாக உள்ளது. கர்தார்பூருக்கு செல்வதற்கு இந்தியர்கள் கட்டணமாக 20 டாலர் (சுமார் ரூ.1,400) செலுத்த வேண்டும்.
இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், கர்தார்பூர் பயணம் மேற்கொள்ளும் சீக்கியர்களுக்கு அதிரடியாக பல்வேறு சலுகைகளை அறிவித்தார். கர்தார்பூருக்கு சீக்கியர்கள் வர பாஸ்போர்ட் தேவையில்லை. செல்லத்தக்க அடையாள அட்டை இருந்தால் போதுமானது, வழித்தடம் தொடங்குகிற நாளில் கட்டணத்தில் இருந்து விலக்கு தரப்படும் என தெரிவித்தார். கர்தார்பூருக்கு செல்கிற முதல் இந்திய குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்திப்சிங் பூரி ஆகியோர் இடம் பெறுகின்றனர்.
குர்தார்பூருக்கு சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் தேவையில்லை என்ற இம்ரான்கான் அறிவிப்பை தொடர்ந்து, இதை உறுதி செய்ய இந்தியா விரும்பியது. இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, இம்ரான்கான் முடிவுக்கு பாகிஸ்தான் ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறுகையில், நாங்கள் பாதுகாப்பு இணைப்பை கொண்டுள்ளோம். கர்தார்பூருக்கு சீக்கியர்கள் வருவது சட்டபூர்வமாக இருக்க வேண்டும். பாதுகாப்பில் அல்லது இறையாண்மையில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார். ஆனால் கர்தார்பூர் பயணத்துக்காக இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என்ற இம்ரான்கானின் அறிவிப்பை பாகிஸ்தான் அரசு நேற்று முன்தினம் மாலையில் உறுதி செய்தது. அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பின் போது இதை வெளியிட்டார். மேலும் இன்று 9-ம் தேதி மற்றும் 12-ம் தேதி பயணிப்போர் 20 டாலர் கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. நிர்வாகிகளிடம் 2-வது நாளாக விசாரணை
25 Nov 2025கரூர் : கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் 2-வது நாளாக நேற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
சிம்கார்டை பிறர் தவறாக பயன்படுத்தினால் : தொலைதொடர்பு துறை எச்சரிக்கை
25 Nov 2025புதுடெல்லி : சிம்கார்டை மற்றவர்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், சிம்கார்டை பிறர் தவறாக பயன்படுத்தினால் வாடிக்கையாளர்கள் தான் பொறுப்பு என்றும் தொலைதொடர
-
ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு
25 Nov 2025மும்பை, ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
-
பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை
25 Nov 2025சென்னை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார்.
-
நாளை சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
25 Nov 2025சென்னை : சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சார் பதிவாளர் அலுவலகங் களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
-
வங்கக்கடலில் புயல் சின்னம்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
25 Nov 2025சென்னை : வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதை தொடர்ந்து சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: த.வெ.க.வில் இணைகிறாரா செங்கோட்டையன்?
25 Nov 2025சென்னை : த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக வெளியான தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
வடமாநிலத்தோருக்கு வாக்குரிமை வழங்கினால் புரட்சி வெடிக்கும்: பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை
25 Nov 2025நீலகிரி, மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம் என்று என்று தெரிவித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், வடமாநிலத்தோருக்கு வாக்குரிமை வழங்கினால் புரட்சி வெடிக்கும் என்று எச்சரிக்க
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2025.
26 Nov 2025 -
ரூ.4.90 கோடியில் மாவீரன் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Nov 2025ஈரோடு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவீரன் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
தோனிமடுவுவில் புதிய தடுப்பணை உள்ளிட்ட ஈரோட்டிற்கு 6 புதிய அறிவிப்புகள்
26 Nov 2025ஈரோடு, அந்தியூர் அருகேயுள்ள தோனிமடுவுப் பள்ளத்தின் குறுக்கே 4 கோடி ரூபாய் செலவில் புதிய தடுப்பணை உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலி
-
தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என்பதா? ஈரோடு அரசு விழாவில் கவர்னருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
26 Nov 2025ஈரோடு, தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார்.
-
இந்தியா ஒரு கலாச்சாரத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல: அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு முதல்வர் பதிவு
26 Nov 2025சென்னை, இந்தியா ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்திற்கு சொந்தமானது அல்ல என்று அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


