எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெக்ரான் : ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தில் 5 பேர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஈரானின் அசெர்பைஜான் மாகாணத்தில் உள்ள தப்ரிஸ் நகரை திடீரென பூகம்பம் தாக்கியது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. தூக்கத்தில் இருந்து எழுந்த மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். சில இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஜன்னல்கள் உடைந்து விழுந்தன. பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்தன. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.17 மணிக்கு ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 5.9 புள்ளிகளாக பதிவானது. 8 கி.மீ. ஆழத்தை மையமாக கொண்டு பூகம்பம் உருவாகி இருந்தது. பூகம்பத்தால் ஏற்பட்ட சம்பவங்களில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் வீடுகள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாகாண கவர்னர் முகமது ரிசா கூறுகையில், பூகம்பத்தினால் 30 வீடுகள் சேதமடைந்துள்ளது. 41கிராமங்களில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது என்றார். பூகம்பத்தில் சிக்கி 200 கால்நடைகள் உயிரிழந்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின குடியரசு தின விழா வாழ்த்து
26 Jan 2026சென்னை, பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம் என்று குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு 3-வது வரிசையில் சீட் ஒதுக்கீடு
26 Jan 2026டெல்லி, குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு பின்வரிசை அமரவைக்கப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியை அறிவித்தார் முதல்வர்
26 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சியல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு நிதி உதவியை முதல்வர் அறிவித்தார்.
-
சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு
26 Jan 2026டெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா\ விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
-
18 ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கையெழுத்தானதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.



