முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி குடியரசு தின விழாவில் 900 கி.மீ. வேகத்தில் பறந்து போர் விமானங்கள் சாகசம்

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2026      இந்தியா
MODI-1-2026-01-26

புதுடெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு மணிக்கு 900 கி.மீ. வேகத்தில் பறந்து இந்திய போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன.

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.  ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் டெல்லி கடமை பாதையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்க, 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு விரிவான கண்காணிப்பு பணிகளும் நடந்து வருகின்றன. 

இந்த தினத்தில் இந்திய விமான படையின் விமானிகள் பல்வேறு சாகசங்களை நிகழ்ச்சி ஆச்சரியப்படுத்தினர். 5 வெவ்வேறு தளங்களில் இருந்து சீறி பாய்ந்த விமானங்கள் வானில் அணிவகுத்து சென்று பார்வையாளர்களை பரவசப்படுத்தின. 16 போர் விமானங்கள், 4 போக்குவரத்து விமானங்கள் மற்றும் 9 ஹெலிகாப்டர்கள் என மொத்தம் 29 விமானங்கள் இதில் கலந்து கொண்டன.

இதில், வி என்ற ஆங்கில எழுத்தின் வடிவில் விமானங்கள் சென்றன. அப்போது, ஒரே உயரத்தில் விமானங்கள் பறந்தன. பின்னர், வஜ்ரங் வடிவிலான சாகசத்தின்போது, 6 ரபேல் போர் விமானங்கள் வானில் அதிக துல்லியத்துடன், வலிமை மற்றும் போருக்கு தயாராவதற்கான முறையை பிரதிபலிக்கும் வகையில் பறந்து சென்றன. திரிசூல வடிவிலான விமான சாகசத்தின்போது, அதற்கு பின்னால் ரபேல் போர் விமானம், மணிக்கு 900 கி.மீ. வேகத்தில் பறந்து சென்றது.  

அப்போது, ராஜபாதையின் வடக்கே நீர்வழியின் மேலே பறந்தது. தரையில் இருந்து 300 மீட்டர் உயரத்தில் இந்த விமான சாகசம் நிகழ்த்தப்பட்டது. பார்வையாளர்களை நோக்கி அதிவிரைவாக வந்த அந்த விமானம், அப்படியே மேலே எழுந்து பறந்து சென்றது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அப்போது, விமானம் மிக தாழ்வாக அதேநேரத்தில் விரைவாக பறந்தது. இது விமானியின் திறமை, விமானத்தின் ஆற்றல், நம்ப முடியாத அளவிலான உந்துசக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தின. இதேபோன்று, ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை நினைவுப்படுத்தும் வகையில், ரபேல், மிக், சுகோய் மற்றும் ஜாகுவார் விமானங்களை உள்ளடக்கிய விமான சாகச நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து