Idhayam Matrimony

நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக்கொடியை ஏற்றினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2026      இந்தியா
Draupadi-Murmu-1-2026-01-26

புதுடெல்லி, நாட்டின் 77-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு கடமைப்பாதையில் 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்தியாவின் படை வலிமை, பன்முக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் டெல்லி கடமை பாதையில் முப்பைடை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது.  மும்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி திரெளபதி முர்மு ஏற்றார். லெப்டினென்ட் ஜெனரல் பாவ்னீஷ் குமார் தலைமையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விமானப்படை சார்பில் 29 விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது.

குடியரசு தினவிழாவில் ஆளில்லா விமானங்கள், டிரோன்கள், ராணுவ டாங்கிகள், டி19 பீஷ்மா ரக பீரங்கிகள் உள்ளிட்டவை அணிவகுத்தன. குடியரசு தினவிழாவில் சூர்யஸ்திர ராக்கெட் லாஞ்சர், ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு, அர்ஜூன் வகை பீரங்கிகள் அணிவகுத்தன.

குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் ஆண்டோனியோ லுயிஸ் சாண்டோஸ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பை கண்டுகளித்தனர். அதேபோல, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து