முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வைக்கு பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் - சிகாகோவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

சிகாகோ, : மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வைக்கு பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரும்  தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்  என்று சிகாகோவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேசினார்.

சிகாகோ நகரில்  நேபர்வல்லில், மெட்ரோபாலிட்டன் ஏசியா ஃபேமிலி சர்வீசஸ் மையத்தின் சார்பில் நடைபெற்ற தேசத்தந்தை  மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவில்  தமிழ்நாடு துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம்  பேசியதாவது:

 மகாத்மா காந்தியின் 150- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “9ஆவது காங்கிரஸெனல் விருது கண்கவர் நிகழ்ச்சியில்  உலகளாவிய சமூக ஆஸ்கர், 2019” விருது பெற்ற திருமதி.சந்தோஷ்குமார் அவர்களை முதலில் நான் பாராட்டுகிறேன்.

சிகாகோ பெருநகரத்தில் அவர் ஆற்றிய மிகச் சிறப்பான சமுதாயப் பணிகளுக்காக இப்போது திருமதி.சந்தோஷ்குமாருக்கு இன்னொரு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
திருமதி.சந்தோஷ்குமார்  சுவாமி விவேகானந்தரின் வழியைப் பின்பற்றி சிகாகோ வந்து - இங்கே ஒரு சமுதாய அமைப்பை உருவாக்கியிருக்கிறார்.

கடந்த பல வருடங்களாக “மெட்ரோபாலிட்டன் ஏசியன் ஃபேமிலி சர்வீஸஸ்” அமைப்பு இங்கே ஆற்றும் சமுதாயத் தொண்டுகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அதற்காக அவர்களை பாராட்டி, மென் மேலும் இது போன்ற சமுதாயப் பணிகளில் - எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.  எனக்கும் இந்த அமைப்பின் சார்பில் இன்று “மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்” பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  இது மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் விழா. கடந்த சில நாட்களாக நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அமெரிக்க வாழ் சமூகத்தின் தலைவர்கள் பலரும் எங்கள் தேச தந்தையின் பெயரை உச்சரிப்பதைக் கேட்கும் போது இந்தியன் என்ற முறையில் எனக்கு பெருமையாகவும், மனநிறைவாகவும் இருக்கிறது.

மகாத்மா காந்தி அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களை மீண்டும் மீண்டும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டிருப்பதாக எண்ணுகிறேன். இன்றைய தினம் பதக்கத்தை வழங்கி என்னை கவுரவித்துள்ளதற்கு நன்றி. இந்த பதக்கம் என் மீது மேலும் ஒரு புதிய பொறுப்பை என் மீது சுமத்தியிருக்கிறது என்பதை தெரிவித்து – அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து