அய்யப்ப சீசனை முன்னிட்டு களைகட்டும் பழங்கள் விற்பனை

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2019      திண்டுக்கல்
24 dgl fruits

திண்டுக்கல், -அய்யப்ப சீசனை முன்னிட்டு திண்டுக்கல் அருகே கொடைரோட்டில் பழங்கள் விற்பனை களைகட்டி வருகிறது.
திண்டுக்கல் அருகிலுள்ள கொடைரோடு பஸ் நிலையம் பகுதியில் ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, திராட்சை. சப்போட்டா ஆகிய பழக்கடைகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்தும் அன்றாடம் புதிதாக வரும் பழங்களை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்கின்றனர். சில்லறை வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களிலேயே பழங்களை வாங்கிச் செல்வதால் இடைத்தரகர்கள் யாருமின்றி மால்களில் விற்பனை செய்யப்படும் விலையை காட்டிலும் குறைவாக கிடைக்கிறது. இதனால் 4 வழிச்சாலைகளில் செல்லும் வெளியூர் பயணிகள் இங்கு நின்று இதுபோன்ற பயணிகளை வாங்கிச் செல்கின்றனர்.
தற்போது அய்யப்ப சீசன் களைகட்டி வருவதால் இந்த பழக்கடைகளில் விற்பனை களைகட்டி வருகிறது. ஆப்பிள் ரூ.70, மாதுளை ரூ.80, ஆரஞ்சு ரூ.40 முதல் 60, சப்போட்டா ரூ.30, திராட்சை ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர வாழை, இலந்தை பழங்களும் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் வழக்கமான கடைகளுடன் சீசன் பழக்கடைகளும் தொடங்கியுள்ளது. இதனால் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்து பழங்களை வாங்கிச் செல்கின்றனர். இது மட்டுமின்றி பிளாஸ்டிக் குடங்கள் மற்றும்  வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகளும் தொடங்கப்பட்டுள்ளதால் விற்பனை களைகட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து