முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவனியாபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு ஆர்வத்துடன் இளைஞர்கள் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      மதுரை
Image Unavailable

மதுரை, - மதுரை அவனியாபுரத்தில் வடமாடு மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மதுரை அவனியாபுரம் ஏ.கே.கோபாலகிருஷ்ணனின் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு விழா நேற்று அவனியாபுரம் திருப்பரங்குன்றம் ரோட்டில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர், மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி  வைத்தார்.  இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., ராம்கி விஜயன் என்ற அவனி விஜயன் ஆகியோர்  தலைமை வகித்தார். தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், அ.தி.மு.க.அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.முத்துராமலிங்கம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்குழு தலைவர் ஏ.கே.கண்ணன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத்தலைவரும், தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழக தலைவரும், மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளருமான சோலைராஜா ஆகியோர் வரவேற்று பேசினர்.  இதில் மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி இணைச்செயலாளர் கிரம்மர் சுரேஷ், இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாவட்ட இணை செயலாளர் எஸ்.எம்.எஸ்.செல்வகுமார், வட்ட செயலாளர் எம்.கர்ணா, தெற்கு தாலுகா மீன்வளத்துறை சேர்மன் பி.பி.எம்.விஜயன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில இணை செயலாளர் வி.வி. ஆர்.ராஜ்சத்யன், அவனியாபுரம் பகுதி செயலாளர் எஸ்.முனியாண்டி, மாநில இலக்கிய அணி இணை செயலாளர் வில்லபுரம் ஆர்.கே.ரமேஷ், வட்ட செயலாளர்  ஜெயக்கல்யாணி, ரயில்வே சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வடமஞ்சுவிரட்டு நலச்சங்க கெளரவத்தலைவர் பி.கே.எம்.செல்வம், தென்காசி மயில்வாகனம், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க தலைவர் தொண்டைமான் செந்தில், வட மஞ்சுவிரட்டு சங்க மாநில தலைவர்  பனங்குடி அந்தோணி முத்து, ரேக்ளா ரேஸ் சங்க தலைவர் மோகன் சாமிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மாடுகளை அடக்கினர். வெற்றி பெற்ற மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள், பேன், கன்றுக்குட்டி, குத்துவிளக்கு உள்ளிட்ட பலபொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. 100 - க்கும் மேற்பட்ட காளைகள் இந்த மஞ்சுவிரட்டு விழாவில் கலந்து கொண்டது. இந்த மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு கண்டு களித்தனர். மாடுபிடி வீரர்களுக்கும் உற்சாகம் அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து