பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாளில் துாக்கு தண்டனை ஆந்திராவில் புதிய சட்டம் இயற்றம்

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019      இந்தியா
Andhra New Law 2019 12 13

ஐதராபாத் : ஆந்திராவில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு, 21 நாளில் துாக்கு தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை அம்மாநில அரசு இயற்றி, சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்.  இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடூர தண்டனைகளுக்கு 21 நாட்களுக்குள் தண்டனை வழங்கும் சட்ட மசோதாவை ஆந்திர சட்டசபையில் தாக்கல் செய்ய முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஐதராபாத் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்னை குறிக்கும் விதமாக திஷா என்ற பெயரில் பெண்களை பாதுகாக்கும் இந்த சட்ட மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இச்சட்டத்தின்படி, பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணையை, வழக்கு பதிவு செய்த 7 நாளில் முடிக்க வேண்டும்; குற்றம் நடந்த, 14 நாட்களுக்குள் நீதிமன்ற விசாரணை முற்றுப்பெற வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 21 நாட்களுக்குள் குற்றவாளிக்கு துாக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும்; சமூக வளைதளங்களில் பெண்களை கீழ்தரமாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு, 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து