மருத்துவமனைக்கு நேரில் சென்று சித்தராமையாவிடம் நலம் விசாரித்த எடியூரப்பா

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019      இந்தியா
Yeddyurappa-Siddaramaiah 2019 12 13

பெங்களூர் : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தற்போதைய முதல்வர் எடியூரப்பா.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான சித்தராமையாவுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கர்நாடக மாநில முதல்வரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எடியூரப்பா நேற்று  நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சந்திப்பின் போது இருவரும் கைகளை இறுகப் பற்றியபடி உரையாடினர். அரசியல் கொள்கை ரீதியாக எதிரும் புதிருமான தலைவர்களின் நெகிழ்ச்சியான இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தராமையாவின் உடல்நிலை குறித்து அவரது மகன் யதீந்திரா, என் தந்தைக்கு இதயத்தில் சிறு கோளாறு ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆஞ்ஜியோபிளாஸ்டி செய்துள்ளோம். தற்போது அவர் தேறி வருகிறார் என்று தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து