ஓய்வு திட்டங்கள் குறித்து டோனி அறிவிக்கவில்லை - தேர்வு குழு தலைவர் பிரசாத் அறிவிப்பு

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2019      விளையாட்டு
dhoni 2019 12 14

மும்பை : இந்திய அணியின் நட்சத்திர வீரர், விக்கெட் கீப்பர், வெற்றிகர முன்னாள் கேப்டன் டோனி ஓய்வு குறித்த திட்டம் எதையும் அறிவிக்கவில்லை, அவருக்கான வாய்ப்பு திறந்தே உள்ளது என்று இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எம்.எஸ்.கே. பிரசாத் கூறியதாவது:-

தொழில்ரீதியான பொறுப்புகளை விடுத்துப் பார்க்கும் போது தேர்வுக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் டோனியின் பெரிய விசிறியே. அவர் சாதிக்காதது என்ன? 2 உலகக்கோப்பைகள், சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட்டில் நம்பர் ஒன் என்று அவர் அனைத்தையும் சாதித்துள்ளார். மாஹி (டோனி) இதுவரை ஓய்வுத் திட்டம் எதையும் அறிவித்து விடவில்லை. தெரிவுகள் திறந்து கிடக்கின்றன. டோனி இது குறித்து முடிவெடுப்பார். ஆனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை, இந்திய கிரிக்கெட்டுக்கு அவரது பங்களிப்புகள் ஆகியவற்றை கேள்வி கேட்க முடியாது. ஆனால் அணித் தேர்வுக் குழுவாக நாங்கள் அவரைக் கடந்து செல்ல வேண்டிய தேவை உள்ளது. அடுத்தத் தலைமுறை வீரர்களை அடையாளம் காண வேண்டியுள்ளது. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவரது நம்ப முடியாத திறமையை நாங்கள் அறிவோம். இப்போது டெஸ்ட் போட்டிகளிலும் தனது திறமைகளை அவர் நிரூபித்து வருகிறார். ஒரேயொரு அயல்நாட்டு டெஸ்ட் தொடர் அவரது மனநிலையை முழுதும் மாற்றி விடும் என்று பிரசாத் தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து