நத்தம் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரம்

23 natham  srinivana

  நத்தம்-- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர்,ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளுக்கு போட்டியிடும்  வேட்பாளர்களை ஆதரித்து குடகிப்பட்டி, செந்துறை உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுகவின் சாதனைகளை கூறி பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், மாவட்ட செயலாளர் மருதராஜ், ஒன்றிய செயலாளர் ஷாஜகான், நத்தம் நகர செயலாளர் சிவலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைப்போலவே செந்துறை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் சவரிமுத்து தனது ஆதரவாளர்களுடன் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இதைப்போலவே குடகிப்பட்டி ஊராட்சியில் ரேவதி அழகர்சாமியும், வேலம்பட்டியில் செல்வி கண்ணனும், செல்லப்பநாயக்கன்பட்டியில் சவுந்திரராஜனும், ஊராளிபட்டியில் மூக்கன், மோகன், ராஜா உள்ளிட்ட மூன்று பேரும்,புன்னப்பட்டியில் ஜெயப்பிரகாஷிம், ரெட்டியபட்டியில் காத்திபவுரும், தங்களது ஆதரவாளர்களுடன் சென்று அவரவர் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும் வடக்கு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சின்னாக் கவுண்டர், திமுக வேட்பாளர் முத்துராஜ் மற்றும் முளையூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கண்ணனும், ரெட்டியபட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ரத்தினக்குமாரும், குட்டுப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வீரணனும் தங்களது ஆதரவாளர்களுடனும் கட்சிக்காரர்களுடனும் சென்று வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து