முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

நியூயார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச், விண்வெளியில் தொடர்ந்து 288 நாட்கள் இருந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச மையம் அமைத்துள்ளன. இதில் தங்கியிருந்து அந்நாடுகளின் விண்வெளி வீரர்கள், வீராங்கனைகள் ஆய்வு மேற்கொண்டுவிட்டு பூமிக்கு திரும்புகின்றனர்.

இந்த வகையில், அங்கு சென்ற அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டினா கோச் 288 நாட்கள் ஒரே பயணத்தில் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு மேற் ெகாண்டவர் என்ற சாதனையை நேற்று படைத்துள்ளார். மேலும், அவர் பூமிக்கு திரும்பும் பிப்ரவரி 6ம் தேதியும் இன்னொரு சாதனையாக 300 நாட்களுக்கு மேல் விண்வெளியில் இருந்தவர் என்ற பெருமையையும் பெற உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து