முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருஉத்திரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழா கலெக்டர் வீரராகவராவ் ஆலோசணை

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2020      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவதையொட்டி விழா முன்ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் வீரரகாவராவ் ஆலோசணை நடத்தினார்.
     ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருஉத்திரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெறவுள்ள ஆருத்ரா தரிசன விழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட  கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்திரகோசமங்கையில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயில் மிகவும் பழமையான சிவன் கோயிலாகும்.  இக்கோயிலில் 6 அடி உயரத்தில் மரகத நடராஜர் தனி சன்னதியாக நின்று காட்சி தருவது தனிச்சிறப்பாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் வருகின்ற 09.01.2020 மற்றும் 10.01.2020 ஆகிய  நாட்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறவுள்ளது.  இவ்விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள்ஃபக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதனடிப்படையில் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
 இக்கோயில் திருவிழாவினை பாதுகாப்பான முறையில் நடத்திட ஏதுவாக 450 காவல்துறை சார்ந்த அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கோயில் வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் போதிய அளவு தடுப்புகள் அமைத்திட வேண்டும்.  பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.  அவசர கால சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு மீட்பு பணி வாகனங்கள் தயார் நிலையில் வைத்திட வேண்டும்.  பொதுமக்கள் கோயிலுக்கு சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக கூடுதல் பேருந்துகளை இயக்கிட போக்குவரத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  அதேபோல, தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், ஜெனரேட்டர்களை தயார்நிலையில் வைத்திடவும் தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில், ராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர் என்.ஓ.சுகபுத்திரா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (சிவகங்கை மண்டலம்) டாக்டர் என்.தனபால், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.தங்கவேலு உட்பட அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து