திண்டுக்கல் சிறுமலையில் குதிரை பொங்கல் வைத்து நன்றி செலுத்திய கிராம மக்கள்

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2020      திண்டுக்கல்
16 dglhorse

திண்டுக்கல், - திண்டுக்கல் சிறுமலையில் குதிரைகளுக்கு பொங்கல் வைத்து விழாவாக கிராம மக்கள் கொண்டாடினர்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையின் 2வது நாளாக மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. தங்களுக்காக அனைத்து நாட்களும் பாடுபடும் கால்நடைகளை குளிப்பாட்டி அவற்றுக்கு அலங்காரம் செய்து பிடித்தமான உணவுகளை கொடுத்து மகிழ்விப்பார்கள். திண்டுக்கல் அருகிலுள்ள சிறுமலையில் ஏராளமான குதிரைகளை விவசாயத்திற்காகவும், பயணத்திற்காகவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே தங்களுடன் இணைந்து பாடுபடும் குதிரைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் நேற்று அனைத்து குதிரைகளையும் சுத்தம் செய்து அழகுபடுத்தினர். அவற்றுக்கு மாலை அணிவித்து பலவித உணவுகளை வழங்கினர். பின்னர் குதிரைகளை ஊர்வலமான அழைத்து வந்து உற்சாகப்படுத்தினர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்.
சிறுமலையில் பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. நாங்கள் விவசாய பொருட்களை எடுத்து வருவதற்கு குதிரைகளையே பயன்படுத்தி வருகிறோம். மேலும் பல ஊர்களுக்கு வாகனங்கள் செல்ல வசதி இல்லாததால் குதிரைகளே பெரிதும் உதவி வருகின்றன. எனவே எங்களுக்கு வருடம் முழுவதும் உற்ற துணையாக உள்ள குதிரைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டு பொங்கலைப் போல் குதிரை பொங்கல் கொண்டாடி வருகிறோம் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து