முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் பிரதமர் திடீர் ராஜினாமா

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

Source: provided

கீவ், ஜன : உக்ரைன் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக், தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கியிடம் அளித்துள்ளார்.

உகரைனின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஒலெக்ஸி ஹான்சருக். ஹான்சரூக் ஒரு வழக்கறிஞர் ஆவார். பிரதமராக பதவியேற்கும் முன்பு உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், உக்ரைன் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக், தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். 

தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கியிடம் அளித்துள்ளார். அதிபரின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கே இந்த பதவிக்கு நான் வந்தேன். நாகரீகமாக நடந்து கொள்வதில் அதிபர் செலன்ஸ்கி ஒரு நல்ல எடுத்துக்காட்டான மனிதர். இருப்பினும் அதிபர் மீதான மரியாதை மற்றும் நம்பிக்கை குறித்த சந்தேகங்களை போக்குவதற்காக, நான் ராஜினாமா செய்துள்ளேன். 

எனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் உரிமையுடன் அதிபரிடம் ஒப்படைத்துள்ளேன் என்று ஹான்சருக் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராஜினாமா கடிதம் குறித்து அதிபர் செலென்ஸ்கி பரிசீலித்து, விரைவில் முடிவை அறிவிப்பார் என அதிபரின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து