இந்திய கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி மறைவு - சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்

சனிக்கிழமை, 18 ஜனவரி 2020      விளையாட்டு
Babu Nadkarni dies  2020 01 18

மும்பை : டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டனாக வீசி சாதனை படைத்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி இயற்கை எய்தினார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் நகரில் பிறந்தவர் பபு நட்கர்னி (வயது 86). சிறுவயதில் இருந்தே கிரிக்கெட்டில் ஆர்வமுடைய பபு 1955- ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். சிறந்த ஆல் ரவுண்டரான இவர் இந்திய அணிக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1414 ரன்களும் 88 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது 191 முதல் தர போட்டிகளிலும் விளையாடி 500 விக்கெட்டுகள் மற்றும் 8880 ரன்களும் எடுத்துள்ளார்.

1964 - ம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் வீசிய 32 ஓவர்களில் 27 ஓவர்கள் மெய்டன் ஆனது. அதிலும் தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டனாக வீசினார். 32 ஓவர்களில் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டனாக வீசப்பட்ட இவரது சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை. 86 வயதான பபு சமீப காலமாக முதுமை சார்ந்த உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், பபு நட்கர்னி நேற்று இயற்கை எய்தியதாக அவரது மருமகன்களில் ஒருவர் தெரிவித்தார். அவரது மறைவிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், சச்சின், விவிஎஸ் லக்‌ஷமன் ஆகிய வீரர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து