எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு நடைபெற்ற பூமிபூஜை விழாவில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சாலைகளை உறுதிப்படுத்திடும் பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வதிகளை மேம்படுத்திடும் வகையில் சிரமமில்லா போக்குவரத்திற்கு வசதியாக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சாலைகளை உறுதிப்படுத்தி மேம்படுத்திடும் பணிகளுக்கான பூமிபூஜை விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.அதன்படி வாரணாசி-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் 3.8கி.மீ தூரத்திற்கு சாலைகளை ரூ.4.22கோடியில் உறுதிப்படுத்துதல்,நெடுஞ்குளம்-கூடக்கோவில் சாலையை ரூ.1.23கோடியில் அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல்,பாப்புநாயக்கன்பட்டி சாலையை ரூ.57லட்சத்தில் மேற்பரப்பு மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6கோடி செலவில் நடைபெறவுள்ள சாலை உறுதிப்படுத்தும் பணிகளுக்கான பூமிபூஜை விழாக்களில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.பின்னர் நெடுங்குளம்,பாப்புநாயக்கன்பட்டி, திருமங்கலம்- மறவன்குளம் பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்திடும் வகையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நடவுசெய்ததுடன்,சாலையோர மரக்கன்றுகளை சிறப்பான முறையில் பராமரித்திடுமாறு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.
இதனிடையே நெடுங்குளம் கிராமத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்: நாட்டில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சிறப்பாக பராமரித்து நாட்டின் முதன்மையான மாநிலம் தமிழகம் என்ற அங்கீகாரத்தை பெற்று தமிழக முதல்வர் சத்தமின்றி சாதனை படைத்து வருகிறார்.இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் ஒரு பழத்திற்காக ஏங்கி,கடைசியில் அந்த பழம் கிடைக்கவில்லை என்றால் சீச்சி இந்த பழம் புளிக்கும் என்பது போல 5முறை ஆட்சியில் இருந்தும் எந்தவிதமான விருதுகளையும்,அங்கீகாரங்களையும்,மக்கள் செல்வாக்கையும் பெற்றிட முடியவில்லை. இன்றைக்கு தமிழகத்திற்கு கிடைத்துள்ள விருது தமிழ் இனத்திற்காக கிடைத்த மாபெரும் சிறப்பினை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் நாகரீகம் கடந்து பேசுகிறார்.இது அவருடைய இயலாமையை காட்டுகிறது.ஆகவே விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என்று சொல்கிறார் என்றால் அவர்களது ஆட்சிக்காலத்தில் இந்த அங்கீகாரத்தை அவர்களால் ஏன் பெற முடியவில்லை.
இன்றைக்கு தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ள விருது ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கொடுக்கப்படவில்லை.முழமையாக ஆராய்ந்து பார்த்து முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளன்று நல்லாட்சி நடத்துகிற நாடு என தமிழகத்தை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் பல்வேறு அவதூறு பிரச்சாரங்களை பரப்பினார்கள்.அது மக்களிடம் எடுபடவில்லை என்பதால் தற்போது விருது கொடுத்தவர்களை அடிப்போம் என்கிறார்கள்.இதனை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு வரும் தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். தமிழினத்திற்கு துரோகியாக உள்ளோரே தமிழினத்திற்கு கிடைத்த பெருமையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என மக்கள் பேசுவதை எங்களால் கேட்கமுடிகிறது.இந்த விருது ஒட்டுமொத்த தமிழினத்திற்கு கிடைத்த அடையாளம்.இதனை மத்திய அரசு நமக்கு கொடுத்துள்ளது என்றால் இது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை.இந்த பெருமையை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதில் களங்கம் கற்பிப்பது,குற்றம் கண்டுபிடிப்பது,விவாதம் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத நிலை என்பதை எதிர்கட்சித் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன்,ஒன்றிய செயலாளர்கள் வக்கீல்அன்பழகன்,மகாலிங்கம்,ராமசாமி,யூனியன் சேர்மன்கள் திருமங்கலம் லதாஜெகன்,கள்ளிக்குடி மீனாட்சிமகாலிங்கம்,டி.கல்லுப்பட்டி சண்முகப் பிரியா பாவடியன்,துணை சேர்மன்கள் வளர்மதி,கலையரசி,முனியம்மாள்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,நகர் அவைத்தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் துணை சேர்மன் சதீஸ்சண்முகம்,நெடுஞ்சாலைத்துறை டிவிசனல் இன்ஜினியர் பிரசன்னவெங்கடேஷ்,துணை செயற்பொறியாளர் சுகுமார்,உதவி பொறியாளர் ராஜேஸ்வரி மற்றும் ஏராளமான பொதுமக்கள்,கட்சி நிர்வாகிகள்,ஒன்றிய கவுன்சிலர்கள்,அரசு அலுவலர்கள்,அரசு ஒப்பந்தகாரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சார்லி கிர்க் துக்க நிகழ்ச்சி: ட்ரம்ப் - எலான் மஸ்க் சந்திப்பு
22 Sep 2025வாஷிங்டன் : கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ
-
கைபர் பக்துன்வாவில் பாக். விமானப்படை குண்டுவீச்சு : 30 அப்பாவி மக்கள் உயிரிழப்பு
22 Sep 2025இஸ்லாமாபாத் : பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக கைபர் பக்துன்வாவில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசியதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது : அமுதா ஐ.ஏ.எஸ். தகவல்
22 Sep 2025சென்னை : கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் 7 திட்டங்களை உள்ளடக்கி சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுமென அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது
22 Sep 2025இம்பால் : மணிப்பூரில் பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
இஸ்ரேல் திடீர் டிரோன் தாக்குதல்: லெபனானில் 5 பேர் பலி
22 Sep 2025பெய்ரூட் : லெபனானில் இஸ்ரேலின் டிரோன் தாக்குதலில் அமெரிக்க குடிமக்களான 3 குழந்தைகள் மற்றும் அவர்களுடைய தந்தை பலி ஆனார்கள்.
-
சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்: விஜய் மீது அப்பாவு விமர்சனம்
22 Sep 2025நெல்லை : சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் என்றும், விஜய்க்கு அகந்தை அதிகமாக உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
-
3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல்லில் நிலநடுக்கம்
22 Sep 2025இடாநகர் : 3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கர்நாடகா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்
22 Sep 2025பெங்களூரு : கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2010-ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்: ராஜ்நாத் சிங்
22 Sep 2025ரபாத் : மொராக்கோ பாதுகாப்புத்துறை மந்திரி அப்தெல்டிப் லௌடியின் அழைப்பின் பேரில் 2 நாள் அரசு முறைப்பயணமாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மொராக்கோ சென்றுள்ளார்.
-
சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்: பிரதமர் மோடி துணை ஜனாதிபதி புகழாரம்
22 Sep 2025புதுடெல்லி : சாத்தியமற்றதை பிரதமர் மோடி சாத்தியமாக்குவதாக துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.