எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : அம்மாவின் அரசுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன என்றும் மக்கள் நம்பிக்கையை பூரணமாக பெற்று அரசு பீடு நடைபோடுகிறது என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதத்துடன் சட்டசபையில் கூறினார்.
தமிழக சட்டசபையில் நேற்று 2020–21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கி செயலாற்ற வல்லவரே, செயல் திறன் படைத்தவர் என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கு இலக்கணமாகி, நிதி ஆதாரங்களை வெகுவாக பெருக்கி, அனைத்து துறைகளுக்கும் அதனை ஒதுக்கி தந்து, நாடு வளம் பெறச் செய்து, எதிர்வந்த இன்னல்களையும் இடையூறுகளையும் பொடிப்பொடியாக்கி, துடைத்து தூரத் தள்ளி, மக்கள் நலன் ஒன்றே மனதில் கொண்டு செயலாற்றி தமிழ்க்குடியை மேலும் மேலும் முன்னேற்றவும், தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக நிலை நிறுத்திடவும், மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா, தனது வாழ்க்கையை முழுவதையும் தமிழக மக்களுக்கே ஈந்து, அரும்பாடுபட்டு, பெரும் பெருமையை பெற்றார்.
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்னும் லட்சிய முழக்கத்தோடு மக்களுக்குத் தொண்டு செய்வதே தனது வாழ்நாள் கடமை எனக் கொண்டு இரவு பகல் பாராமல், ஓய்வென்பதே இன்றி செயலாற்றி, தமிழக மக்களின் இதயங்களில் என்றும் நீங்கா இடம் பிடித்த, அம்மாவின் உழைப்பிலும், தியாகத்திலும் பூத்த அம்மாவின் அரசை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று சிறப்பாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
ஏழையரிடம் அன்பு செலுத்தி, எளியவர்க்கு ஆதரவு காட்டி, தாய்க்குலத்திற்கு பெருமை தந்து, மகளிர் அதிகாரம் பெற்றிட வழி வகுத்து, தமிழக மக்கள் அனைவரும் நலமே காண தினம் உழைத்து, அவர்தம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று, மறைந்தும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாவை வணங்கி, அம்மா விண்ணின்று எங்களை வாழ்த்தி, வழி நடத்திட வேண்டும் என வேண்டி, 2020- 21ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை இப்பேரவை முன் சமர்ப்பிக்கின்றேன். தாய்த் தமிழ்நாட்டை எவ்வாறெல்லாம் உயர்த்த வேண்டும் என்று அம்மா கனவு கண்டாரோ, அந்த விருப்பங்களையெல்லாம் நிறைவேற்ற, அம்மாவின் அரசு தணியாத சாதனை தாகத்துடன் கடமையாற்றி வருகிறது.
அம்மாவின் விசுவாசத் தொண்டர்களாகிய நாங்கள், அம்மாவின் தொலைநோக்குப் பார்வையினைத் தொடர்ந்து பின்பற்றுவதுடன் ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்கிற அவரது கொள்கையினை முன்னெடுத்துச் சென்று, தமிழ்நாட்டு மக்கள் நல் ஆளுமையின் பலன்களை முழுமையாக அடைவதற்கு அயராது பாடுபட்டு வருகிறோம். அம்மா, மூன்றாண்டுகளுக்கு முன்னர் நம்மை விட்டு நீங்கிய போது, நாம் அனைவரும் திக்கற்றவர்களாக உணர்ந்தோம். எனினும், அம்மாவின் உண்மையான தாயுள்ளம், நாங்கள் செல்ல வேண்டிய பாதையை வகுத்துக் காட்டியுள்ளதுடன், மக்கள் பணியாற்றும் விடாமுயற்சியில் தளராத உறுதியையும், மக்கள் சேவையைத் தொடர்வதற்கான ஆற்றலையும் எங்கள் ஒவ்வொருவருக்கும் அளித்துச் சென்றுள்ளது. அம்மாவின் மறைவிற்குப் பின்னர், இந்த அரசின் ஆட்சி நீடிக்காது, ஆட்சி மாறி விடும் என்றெல்லாம் சிலர் கூறி வந்தனர்.
ஆனால், அம்மா காட்டிய வழியில், அவர் தம் நல்லாசிகளுடன் முதல்வரின் தலைமையில் மிகத் திறமையுடன் செயல்பட்டு வரும் அம்மாவின் அரசு, அனைத்து விமர்சகர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் கருத்துக்களைப் பொடிப்பொடியாக்கி தொடர்ந்து நல்லாட்சி புரிந்து வருவது மட்டுமல்லாமல், மென்மேலும் வலுவடைந்து, மக்கள் நம்பிக்கையைப் பூரணமாகப் பெற்று, பீடுநடை போட்டு வருகிறோம். உள்நாடு மட்டுமல்லாமல், உலகெங்கிலும் இருந்தும் பாராட்டுக்கள் குவியும் வண்ணம் அம்மாவின் அரசின் செயல்பாடுகள் மிளிர்கின்றன.
2019-ம் ஆண்டிற்கான சிறந்த ஆட்சிக்கான, நல் ஆளுமை விருதினை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. நாங்கள் தமிழ்நாட்டை தொடர்ந்து அமைதிப் பூங்காவாக விளங்கச் செய்து வருகிறோம். நிலையான, கணிக்கத்தக்க, அனைவருக்கும் இசைவான கொள்கைகளுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அனைவரும் எளிதில் அணுகி, முறையீடுகள், ஆலோசனைகள் மற்றும் உண்மையான குறைகளுக்கு நியாயமான மற்றும் விரைவான பதில்கள் கிடைக்கும் வகையில் இந்த அரசு செயலாற்றி வருகிறது. நாங்கள் மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு அதற்கு உடனடியாகத் தீர்வு வழங்கி வருகின்றோம்.
நாங்கள் சமூகத்தில் உள்ள மிக ஏழ்மை நிலையில் உள்ளவர்களையும் பாதிப்பிற்குள்ளாகக் கூடியவர்களின் குறைகளையும் போக்கி வருகின்றோம். அறிஞர்களின் மதிநுட்ப ஆலோசனைகளுக்கு செவி சாய்த்து, அவர்களின் அறிவுரைகளின் பேரில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் ஆய்ந்த அறிவுடன் நாங்கள் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறோம். பல பன்னாட்டு நிதி நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய மிகவும் விரும்புகின்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. மக்கள் அமைதியாக வாழ்வதற்கும், அவர்களின் இலட்சியங்களை அடைவதற்கும், எளிதில் அரசினை அணுகி, அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியுள்ளோம். நம் மாநிலத்தில், சட்டம் ஒழுங்கை தொடர்ந்து திறம்பட நிலைநாட்டி, மக்கள் பாதுகாப்பு உணர்வுடன் நல்வாழ்வு வாழ்வதை இவ்வரசு தொடர்ந்து உறுதி செய்யும்.
தொடர்ச்சியாகப் பெறப்படும் முதலீடுகளும், சிறப்பான பொருளாதார நடவடிக்கைகளும், மக்களுக்கு மேன்மேலும் வேலைவாய்ப்புகளையும் வருமானத்தையும் உருவாக்கித் தரும். ஏழை எளியோர், நலிவுற்றோர் மற்றும் அடித்தட்டு மக்கள் பாதுகாக்கப்படுவதை இந்த அரசு முனைப்புடன் உறுதி செய்யும். ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்னும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் இந்த வரவு–செலவுத் திட்ட அறிக்கையில் அடங்கியுள்ளன. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.