எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் அ.தி.மு.க. அரசுக்கு மக்களின் பேராதரவு பெருகி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டிவிட்டு, இஸ்லாமிய சமூக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அ.தி.மு.க. எப்போதும் செயல்படும். அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., பொதுச்செயலாளர் அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் கட்டிக் காத்த கழகமும், அவர்கள் வழியில் நடைபெறும் அ.தி.மு.க. அரசும், சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் சமத்துவ, சகோதரத்துவ கொள்கைகளை நிலைநாட்ட எப்பொழுதும் உறுதியாய் பாடுபடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். சமூக விரோத சக்திகளும், பதவிக்கு வருவதற்காக பாதகச் செயல்களை மனசாட்சியின்றி துணிந்து செய்யும் சில எதிர்க்கட்சிகளும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதை அனைவரும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அ.தி.மு.க. அரசுக்கு மக்களின் பேராதரவு பெருகி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டிவிட்டு, இஸ்லாமிய சமூக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே, உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே என்ற சகோதரத்துவ உணர்வில் ஆழமான நம்பிக்கை கொண்ட இயக்கம் அ.தி.மு.க. இது உண்மையான மதச்சார்பற்ற இயக்கம். மதத்தின் பெயரால் மனிதர்களை பிளவுபடுத்தும் எண்ணம் துளியும் இன்றி, எல்லோரையும் சொந்த பந்தங்களாகவும், சகோதரர்களாகவும் நேசித்துப் பழகுவதுதான் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை. அதுவே, எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோர் காட்டிய பாதை. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அ.தி.மு.க. அரசு, இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாவலனாகவும், அவர்களின் நலன் பேணும் நண்பனாகவும் செயல்பட்டு வருகிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமிய மக்களுக்கு தொண்டு செய்து வருவதும் அ.தி.மு.க. அரசுதான்.
ஹஜ் புனித பயணத்திற்கான மானியத் தொகையை மத்திய அரசு நிறுத்தினாலும், அ.தி.மு.க. அரசு ஆண்டுதோறும் ஹஜ் மானியமாக 6 கோடி ரூபாயை வழங்கி வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள மூவாயிரத்திற்கும் அதிகமான பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க 5,145 மெட்ரிக் டன் அரிசியை ரம்ஜான் மாதத்தில் வழங்கி வருகிறது. நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகளைதமிழ் நாடு அரசே வழங்கி வருகிறது. மாவட்ட ஹாஜிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் மதிப்பூதியம். பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் வக்பு நிறுவனங்களில் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு ரூபாய் 5 கோடி தொகுப்பு நிதி, தமிழ் நாடு சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக குறைந்த வட்டியில் கல்விக் கடன், தனிநபர் மற்றும் சிறுகடன்கள் கழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. ஓய்வுபெற்ற உலமாக்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 1,500/- ரூபாயிலிருந்து 3,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் நான்காயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமிய பெருமக்கள் தங்களுடைய பயணத்திற்கு முன்பு தங்கி பாஸ்போர்ட், பயண உடைமைகள் சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள ஒரு ஹஜ் இல்லம் 15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும். வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க 25,000/- ரூபாய் (அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அந்தத் தொகை) மானியமாக வழங்கப்பட இருக்கிறது.
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், சமூகப் பாதுகாப்பிலும், பொருளாதார மேம்பாட்டிலும் சிறுபான்மை மக்களுக்கு உதவிட இன்னும் பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த அ.தி.மு.க. அரசு துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய சமூகத்திற்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே இருக்கும் நெருக்கமான உறவையும், புரிதலையும் பிரிக்க முயற்சிக்கும் சக்திகளை முறியடித்து, எல்லோரும் ஓரினமாக எழுச்சியுடன் முன்னேற்றம் கண்டிட, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம். அசாம் மாநிலம் சம்பந்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம், சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே தவிர, அது நாடு முழுவதற்கும் உரியது அல்ல. சிறுபான்மை சமூகத்தினர், குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்று ஏற்கனவே மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அசாம் தவிர, இதர மாநிலங்களுக்கான நடைமுறை வேறெந்த மாநிலத்திற்கும் மத்திய அரசால் வெளியிடப்படவில்லை. இந்திய இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப நடைபெறும் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும் இயன்ற அளவு இணக்கமாய் இருந்து, தமிழ் நாட்டிற்குத் தேவையான திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில்தான் அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின், 1948-ல் அதற்கென்று ஒரு தனிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2003-ம் ஆண்டு, மத்தியில், தி.மு.க. அங்கம் வகித்த பா.ஜ.க. ஆட்சியின் போது, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்குவதற்கு ஏதுவாக, குடியுரிமைச் சட்டம், 1955-ன்கீழ் குடியுரிமை விதிகள், 2003 உருவாக்கப்பட்டன. இந்த விதிகள் மூலம் குடிமக்களை பதிவு செய்து, அவர்களுக்கு ஒரு தேசிய அடையாள அட்டை வழங்க வழிவகை செய்யப்பட்டது. இந்த விதிகளின் கீழ், 2010-ம் ஆண்டு மத்தியில் தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியின் போது தான், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் முதன்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு அங்கமாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இந்தியாவில் 6 மாதமோ அதற்கு மேலோ வசிக்கின்ற அனைத்து நபர்களின் விபரங்கள் ஆவணங்கள் ஏதுமின்றி, குடும்பத்தினர் தெரிவிக்கும் தகவலின் படி பதிவு செய்யப்படுகிறது. தாய்மொழி, தந்தை, தாயார், துணைவர் பிறந்த இடம், பிறந்த தேதி விபரம் மற்றும் ஆதார், கைபேசி எண், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிம எண் ஆகிய விபரங்கள், 2020-ம் ஆண்டு கணக்கெடுப்பில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு தமிழ் நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. நாம் எல்லோரும் ஒரு தாய் மக்களாக அமைதியாகவும், ஒற்றுமையாகவும் உழைத்து, வளமான வாழ்வை உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் தோளோடு தோள் நின்று உழைப்போம்! உயர்வோம்! அ.தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தி குறுக்கு வழியில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்போரின் பொய்ப் பிரச்சாரங்களையும், விஷமச் செயல்களையும் புறந்தள்ளிவிட்டு, சமூக நல்லிணக்கம் காப்பாற்றப்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம். தமிழ் நாட்டில் எந்தஒரு சிறுபான்மை சகோதர, சகோதரிக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது. அ.தி.மு.க. அரசு சிறுபான்மையினருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் அனுமதிக்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். அ.தி.மு.க. இஸ்லாமிய சமூகத்திற்கு என்றைக்கும் நண்பனாகவும், உற்ற தோழனாகவும் விளங்கும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். சிறுபான்மை சமூக மக்கள் விழிப்பாகவும், விஷமப் பிரச்சாரங்களை செய்து சுயலாபம் அடைய சதித் திட்டம் தீட்டி செயல்படுவோரிடம் கவனமாகவும் இருந்து அமைதி காத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


