முன்னாள் எம்.பி.யின் தாயார் மறைவு - இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2020      தமிழகம்
EPS-OPS 2020 02 21

சென்னை : முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். அர்ஜூனனின் தாயார் மறைவுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,

 அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான கே.ஆர். அர்ஜூனனின் தாயார் அம்மு அம்மாள் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். பாசமிகு தாயாரை இழந்து வாடும் அன்பு சகோதரர் அர்ஜூனனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து