முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையில் நூல் நூற்று மகிழ்ந்த அதிபர் டிரம்ப்

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : இந்தியா வந்த அதிபர் டிரம்ப் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரத்யேக காரில் சபர்மதி ஆசிரமம் சென்றார். அங்கு மகாத்மா காந்தி நூல் நூற்ற ராட்டையில் அதிபர் டிரம்ப் தரையில் அமர்ந்து நூல் நூற்று மகிழ்ந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்தடைந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜேர்டு குஷ்னர் மற்றும் அமெரிக்க உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட பிரதிநிதிகள் ஆகியோரும் தனி விமானத்தில் அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தனர். அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்த அதிபர் டிரம்பை கட்டித் தழுவி வரவேற்றார் பிரதமர் மோடி. இதைத் தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரத்யேக காரில் சபர்மதி ஆசிரமம் புறப்பட்டார். சபர்மதி ஆசிர‌ம‌ம் செல்லும் வழியில் அதிபர் டிரம்பிற்கு இந்திய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குஜராத் சபர்மதி ஆசிரமம் அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்றடைந்தார்.

சபர்மதி ஆசிரமத்தில் அதிபர் டிரம்பிற்கு காந்திய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சபர்மதி ஆசிரம நிர்வாகிகள் மோடி மற்றும் அதிபர் டிரம்புக்கு கதர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி வசித்த சபர்மதி ஆசிரமத்தை அதிபர் டிரம்ப் பார்வையிட்டார். அதன் பின்னர், சபர்மதி ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தியின் படத்திற்கு அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மரியாதை செலுத்தினர். காந்தி படத்துக்கு கதர் நூலால் ஆன மாலையை அறிவித்து மோடி, டிரம்ப் மரியாதை செலுத்தினர். காந்தி வசித்த சபர்மதி ஆசிரமத்தை அதிபர் டிரம்புக்கு மோடி சுற்றிக் காட்டினார். காந்தி பயன்படுத்திய பொருள்கள் குறித்தும் அதிபர் டிரம்புக்கு மோடி விளக்கிக் கூறினார். இதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி நூல் நூற்ற ராட்டையில் அதிபர் டிரம்ப் தரையில் அமர்ந்து நூல் நூற்று மகிழ்ந்தார். சபர்மதி ஆசிரமத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் அதிபர் டிரம்ப் தனது கருத்தைப் பதிவிட்டார். எனது சிறந்த நண்பர் பிரதமர் மோடிக்கு நன்றி, அற்புதமான பயணம் என்று சபர்மதி ஆசிரம‌ வருகை பதிவேட்டில் அதிபர் டிரம்ப் பதிவு செய்தார். டிரம்புடன் அவரது மனைவி மெலனியாவும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். பிறகு மகாத்மா காந்தியின் 3 குரங்கு பொம்மைகளை காட்டி அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். இறுதியாக சபர்மதி ஆசிரமத்தில் இருந்து மொதேரா கிரிக்கெட் மைதானத்திற்குச் அமெரிக்க அதிபர் டிரம்ப் புறப்பட்டு சென்றார். மொதேரா மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து