ராமநாதபுரத்தில் அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

5 rmd sports

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வரும் 10-ந் தேதி நடைபெறுகிறது.
         2019-20-ம் ஆண்டிற்கான அரசுப்பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளான தடகளம் மற்றும் குழு ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் 10-ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது. தடகளம் மற்றும் குழு விளையாட்டுகளிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட உள்ளது. தடகளப் போட்டியில் 100 மீ, 200 மீ, 800 மீ, 1500 மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4ஓ100மீ தொடர் ஓட்டம் ஆண்களுக்கும், 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4ஓ100மீ தொடர் ஓட்டம் பெண்களுக்கும் நடைபெறவுள்ளன.   ஆடவர் மற்றும் மகளிர் பங்கேற்கும் இறகுப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கபாடி, மேசைப்பந்து, கையுந்துபந்து ஆகிய குழு விளையாட்டு போட்டிகளும் மற்றும் ஆடவர் மட்டும் பங்கேற்கும் கால்பந்து போன்ற குழு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
 இப்போட்டிகளில் மாநில அரசுத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளலாம்.  காவல்துறையில் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொள்ளலாம்.  அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் கலந்து கொள்ளலாம். ஒப்பந்த பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் கலந்து கொள்ள இயலாது.  காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் பணிபுரிபவர்கள் கலந்து கொள்ள இயலாது.  சீருடைப் பணியாளர்கள் பங்குபெற அனுமதி இல்லை.  தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்கள் இப்போட்டிகளில் பங்குபெற அனுமதி இல்லை.  தொழில்முறை விளையாட்டு வீரர்கள் ஒப்பந்த பணியாளர்கள் இப்போட்டியில் பங்குபெற அனுமதி இல்லை.  அரசுப் பணியில் புதியதாக சேர்ந்து ஆறு மாதகாலத்திற்குட்பட்டவர்கள் கலந்து கொள்ள இயலாது.
 தனிநபர் போட்டிகளில் முதல் இடம் பெறுபவர்கள் மட்டும் மற்றும் குழுப் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட சிறப்பான அணியினர் மாநில அளவிலான அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்பவர்கள்.  போட்டிகளில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு தினப்படி மற்றும் பயணப்படி அந்தந்த அலுவலகத்தின் பொறுப்பாகும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசுத் துறை அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தங்கள் துறை அலுவலகத் தலைவர் அவர்களிடம் உரிய அனுமதியுடன் கடிதம் பெற்று, மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு தெரிவிக்கும்படி தெரிவிக்கப்படுகிறது.  மேலும் போட்டிகள் தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை 7401703509 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்;டர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து