இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 - ஆக உயர்ந்தது

திங்கட்கிழமை, 23 மார்ச் 2020      இந்தியா
India corona affect rise 2020 03 23

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.

உலக நாடுகளை கதிகலங்க வைத்து வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவிட்டதை மாநில அரசுகள் கடுமையாக பின்பற்றி, விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து