முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நிவாரண நிதிக்கு கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ரூ. 50 லட்சம் வழங்கினார்

திங்கட்கிழமை, 6 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக நிதி வழங்கலாம் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி பிரதமர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் நிதி அளித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். ஏற்கனவே ரெய்னா, ரோகித் சர்மா, சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, கங்குலி, தவான், ரகானே, கவுதம் கம்பிர் போன்றோர் நிதியுதவி அளித்துள்ளனர். இதுகுறித்து யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், நாம் ஒருங்கிணைந்து நிற்கும்போது மிகவும் வலிமையடைவோம் எனப் பதிவிட்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து