முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் 31-ம் தேதியுடன் ஊரடங்கு முடிய வாய்ப்பில்லை : உத்தவ் தாக்கரே தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 31-ம் தேதியுடன் ஊரடங்கு முடிய வாய்ப்பில்லை என்று  அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

நாட்டிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த மாநிலமான மகாராஷ்டிரா உள்ளது. இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 47,190 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,577 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 13,404 பேர்   குணமடைந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிர மக்களுக்கு ஆன்லைன் நேரலை மூலம்  முதல்வர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அப்போது அவர், 

கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பதாகவும், ஆதலால் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார். இன்று 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படுவது குறித்து பேசிய அவர், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை தொடர்பு கொண்டு, விமான போக்குவரத்தை தொடங்க மேலும் அவகாசம் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து