முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 26 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் இருந்து கோதையாறு பாசனத்திற்கு வரும் 8.6.2020  முதல் 28.2.2021 வரை  தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளில் உள்ள  பாசனத்திற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் I மற்றும் II அணைகளிலிருந்து   தண்ணீர்  திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.  வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திற்கு 8.6.2020  முதல் 28.2.2021 வரை நாள் ஒன்றுக்கு 850 கன அடி/விநாடிக்கு,  பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் I மற்றும் II அணைகளிலிருந்து தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மற்றும் பட்டணங்கால்  பாசனப் பகுதிகளின் 79,000 ஏக்கர்  நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து