முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் தவிர்த்து தமிழகத்தில் இன்று பேருந்து சேவை துவக்கம் : 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பஸ்கள் ஓடும்

ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை இன்று 1-ம் தேதி முதல்  நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் கீழ்க்கண்ட  8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.

மண்டலம் 1-ல் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களும், மண்டலம் 2-ல் தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களும், மண்டலம் 3-ல் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களும், மண்டலம் 4-ல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களும், மண்டலம் 5-ல் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களும், மண்டலம் 6-ல் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களும், மண்டலம் 7-ல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களும், மண்டலம் 8-ல்  சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியும் அடங்கும்  

மண்டலம் 7-ல் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் மண்டலம் 8-ல் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும்  இயக்கப்படும். மண்டலம் 7  மற்றும் மண்டலம் 8 -க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது. 

அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் (Stage carriers) இயக்க அனுமதிக்கப்படுகிறது. பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.  மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை. அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது. அரசால் தனியாக வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும்.

இ-பாஸ் முறை :

அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.  அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை. வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து