Idhayam Matrimony

அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்

திங்கட்கிழமை, 29 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

வடசென்னை வடக்கு(கிழக்கு) மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், மாநகராட்சி மாமன்ற முன்னாள் உறுப்பினருமான ஜம்புலி E. வடிவேலு, தென் சென்னை வடக்கு மாவட்டம் அண்ணாநகர் தொகுதி அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் S. அமீர்பாஷா, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தனி வடக்கு ஒன்றிய துணை செயலாளர் T. கோபால் ஆகியோர் உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

கட்சியின் மீதும், கட்சித் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்பகால உடன்பிறப்புகளான ஜம்புலி வடிவேலு, அமிர்பாஷா மற்றும் கோபால் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன் மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து