முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.48. சதவிதமாக உயர்வு : அமைச்சர் காமராஜ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.48. சதவிதமாக உயர்ந்துள்ளது என்று உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஆலோசனைக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் கூறும் போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கண்காணித்து வரப்படுகிறதாகவும், 20 நாட்களுக்கு 49% இருந்த குணமடைந்த விகிதம், 60.48% பேர் சென்னை மாநகரில் குணமடைந்துள்ளனர்என்றார்.

தினந்தோறும் 500 க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு, தீவிர அறிகுறி இருப்பவர்களை சோதனைக்கும் அழைத்து செல்கின்றனர்.

வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் நிலை குறித்து கண்டறிய சோதனை மேற்கொள்ள செல்லும் அனைவருக்கும் தெர்மல் மீட்மர், ஆக்ஸி மீட்டர் வழங்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் இதிலிருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கையில் செயல்பட்டு வருகிறோம் என்றார்.

5 மாவட்டங்களில் 5 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் தேவையன்றி வெளியே வருவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழகத்தை பொறுத்த வரை வேறு எங்கும் இல்லாத வகையில் அனைவருக்கும் விலையில்லா அரிசி, பருப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது, விலையில்லாமல் வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் என்றார்.

தமிழகம் தான் டிக்டாக் தடைக்கு முதலில் குரல் கொடுத்த மாநிலம் தற்போது இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி விவகாரம் தொடர்பாக சி.பி. ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, உண்மை வெளி கொண்டுவரப்படும். இதில் எந்த வித சந்தேகமும் தேவை இல்லை என அவர் தெரிவித்தார்.

பாசிட்டிவ் ஆகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் மீண்டும் நெகட்டிவ் வந்தவர்கள் தான் 60% பேர் வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெள்ளந்தியாக வெளிப்படையாக பேசக்கூடியவர், இதில் கொரோன நோய் தொற்று குறித்த தவறான எண்ணிக்கையை குறைத்து சொல்ல வேண்டிய தேவை இல்லை என்றார். இந்த நிகழ்ச்சியில் அண்ணா நகர் துணை கமிஷ்னர் முத்துசாமி, மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து