முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து

புதன்கிழமை, 1 ஜூலை 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், பொதுமக்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று  நடிகர் ரஜினிகாந்த, தந்தை- மகன் உயிரிழந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது.  சத்தியமா விடவே கூடாது. இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து