எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: ஆர்.சி.பி.-ல் இருந்து லியாம் லிவிங்ஸ்டனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து துஷார் தேஷ்பாண்டேவும் சி.எஸ்.கே. அணிக்கும் மாற்ற பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிரேட் முறையில்..
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதியில் நடக்கவுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளை 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. அந்த வகையில் சில வீரர்களை டிரேட் முறையில் மற்ற அணிக்கு கொடுக்க ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சி.எஸ்.கே. அணியும்...
கடந்த ஐ.பி.எல். சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய தீபர் சாஹர் மீண்டும் சி.எஸ்.கே. அணியில் சேர்க்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதேபோல் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அதிரடி ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் சி.எஸ்.கே. அணிக்கு கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் ஆர்.சி.பி.-ல் இருந்து லியாம் லிவிங்ஸ்டனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து துஷார் தேஷ்பாண்டேவும் சி.எஸ்.கே. அணிக்கும் மாற்ற பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அணிக்கு மேக்ஸ்வெல், லிவிங்ஸ்டன் ஆகிய இரண்டு பேர் சி.எஸ்.கே. அணிக்கு வருவதை ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஷர்துல் தாக்குர் சாதனை
ஐ.பி.எல். டிரேடிங் மூலம் ஷர்துல் தாக்குர் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். மொத்தமாக, மூன்றாவது முறையாக ஷர்துல் தாக்குர் டிரேடிங் மூலம் அணிகளுக்கு மாறியுள்ளார். கடந்த சீசனில் ஏலத்தில் யாருமே எடுக்காத ஷர்துல் தாக்குரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி காயம் காரணமாக திடீரென அணியில் எடுத்தது. தற்போது தனது சொந்த ஊரான மும்பைக்குத் திரும்பியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ரூ. 2 கோடிக்கு டிரேடிங் செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இவர் 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வெல்வதிலும் பங்காற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


