Idhayam Matrimony

நைஜீரியாவில் தொடக்கப் பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து

சனிக்கிழமை, 15 நவம்பர் 2025      உலகம்

அபுஜா, நைஜீரியாவில் தொடக்க பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 2022-ம் ஆண்டு பள்ளிகளில் தாய்மொழி கல்வி கட்டாயமாக்கப்பட்டது. எனவே ஆங்கிலத்துக்கு பதிலாக அந்தந்த பிராந்திய மொழிகளில் மாணவர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டது. இதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்தாலும் அவர்களது கற்றல் திறன் மோசமடைந்ததாக கூறப்பட்டது. மேலும் உயர்கல்வியில் இடைநிற்றல், வெளிநாட்டினருடன் தொடர்பு கொள்வதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களை ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எனவே கட்டாய தாய்மொழி கல்வி சட்டத்தை ரத்து செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் தொடக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை ஆங்கில வழிக்கல்வியே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வித்துறை மந்திரி துஞ்சி அலாசா அறிவித்தார். அதே நேரம் தாய்மொழி மூலம் பயில்வதே மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறனை அதிகரிக்கும். எனவே இந்த சட்டத்தை ரத்து செய்யக்கூடாது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து