முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.எல்.சி.நிர்வாகத்திற்கு ரூ. 5 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

வியாழக்கிழமை, 9 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

பாய்லர் வெடித்த விபத்து தொடர்பாக என்.எல்.சி. நிர்வாகத்திற்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 01-ம் தேதி 5-வது அலகிலுள்ள கொதிகலன் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் என்.எல்.சி. கொதிகலன் வெடித்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே  என்.எல்.சி. விபத்து தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தொழிலாளர் நல ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இது தொடர்பாக  என்.எல்.சி. தலைமை மேலாண் இயக்குனருக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில் என்.எல்.சி. விபத்து தொடர்பாக தாமாக விசாரணைக்கு எடுத்து கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், என்.எல்.சி. நிர்வாகத்திற்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து