முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா மீது உபா சட்டம் பாய்கிறது

வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் (UAPA) உபா பாய்கிறது. இந்த சட்டத்தின்கீழ், கைது செய்யப்படும் ஒருவரை 6 மாதங்கள் விசாரணை இல்லாமல் சிறை வைக்க முடியும். இதன்கீழ் கைதானவரால் ஜாமீன் பெற முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம், 7 வருடம் தண்டனை தர முடியும். தடா, பொடா சட்டங்கள் போன்ற சட்டம் இது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரம் மணப்பாடு பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பெட்டியில் 30 கிலோ கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்ட நிலையில், இது தொடர்பாக சரித் நாயர் என்பவர் கைது செய்யப்பட்டார். 

இந்த கடத்தலுக்கு பின் கேரள அரசின் தகவல் தொடர்பு பிரிவில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் என்பவர் உள்ள தகவல் வெளியான நிலையில் அவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.

இந்த தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பு இருக்கும் நிலையில், கேரள முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலர் சிவசங்கரன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கேரள அரசிற்கும் இந்த கடத்தல் சம்பவத்துடன் சம்மந்தம் இருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில், முதல்வர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 'இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து தகவலும் வெளிக்கொண்டு வர வேண்டும். நாங்களும் விசாரணைக்கு தயார் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து  கேரளாவில் நடைபெற்ற தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் எழுதியதன் பெயரில், தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. 

இந்த நிலையில் கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா மீது உபா சட்டம் பாய்கிறது. சர்வதேச கடத்தல் கும்பலுடன் ஸ்வப்னா தொடர்பை தேசிய புலனாய்வு முகமை உறுதிப்படுத்தியது. உபா சட்டத்தின் கீழ் ஸ்வப்னா மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்கிறது.  தற்போது புலனாய்வு பிரிவின் தேடுதல் வேட்டையில் தப்பும் ஸ்வப்னாவை டிஜிட்டல் முறை மூலம் கண்காணிக்கப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் காரில் மற்றொரு பெண்ணுடன் ஸ்வப்னா தப்புவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்து பங்களாவில் ஸ்வப்னா அடைக்கலம் என்று தகவல் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து