முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தான்குளம் வழக்கு விசாரணை: சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை வந்தனர்

வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : சாத்தான்குளம் வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொள்வதற்காக 7 சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை வந்தனர்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிழந்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து விசாரணையை தொடங்குவதற்காக டெல்லியில் இருந்து விஜயகுமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் மதுரையில் இருந்து கார் மூலமாக தூத்துக்குடி செல்ல உள்ளனர். சி.பி.ஐ. அதிகாரிகள் இரு குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றிய அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய இடங்களான சாத்தான்குளம் காவல்நிலையம், கோவில்பட்டி சிறைச்சாலை, தூத்துக்குடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்ட பிறகு விசாரணையை தொடர்ந்து நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து