எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மறைந்த தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன். ராதா கிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன் மரியாதை செலுத்தினர்.
விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை நேற்று (டிச. 28) கோயம்பேட்டில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப் படத்துக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனிடையே பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன். ராதா கிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன் ஆகியோரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைபிரபலங்களும், திரைப்பட இயக்குநர்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதே போல சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் காலை முதலே தே.மு.தி.க. தொண்டர்களும், ரசிகர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மறைந்த தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


